அச்சுறுத்தல்கள் அகன்று ஆனந்தம் கூடும் நாள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
அல்லல்கள் தீர அனுமனை வழிபட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலம் பற்றிய கவலை உருவாகி மறையும்.
கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும்.
உத்தியோக முன்னேற்றம் ஏற்படும் நாள். உறவினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். பகையொன்று நட்பாகும்.
பிள்ளைகள் வழியில் பெருமைகள் கூடும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் கணிசமான லாபம் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் அனுகூலமாக இருக்கும்.
கடன்சுமை குறையும் நாள். காலை நேரத்தில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். தாய்வழியில் தனலாபம் உண்டு.
தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.
அனைத்திலும் வெற்றி பெற அனுமனை வழிபட வேண்டிய நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காண்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி கூடும்.
எதிர்பாராத காரியமொன்று நடைபெற்று இன்பம் அதிகரிக்கும் நாள். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
திட்டமிட்ட காரியங்களில் திசைதிருப்பங்கள் ஏற்படும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு.
மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டும் பணிக்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வீர்கள்.