மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 26 வயதான Emmanuel Delani Valdez Bocanegr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Ibarra காணவில்லை என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். Ibarraவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம் அவர் Tinder என்ற டேட்டிங் தளத்தில் Bocanegrவுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த Ibarraவின் நண்பர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து Bocanegr குடியிருப்பில் பொலிசார் நடத்திய சோதனையில் ஒரு பையில் மனித எலும்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பிலிருந்து ஆறு கிலோ சதையை கைப்பற்றிய பொலிசார், அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சதையிலிருந்த டிஎன்ஏ காணாமல் போன Ibarra டிஎன்ஏவுடன் பொருந்தியுள்ளது.
மேலும், குடியிருப்பில் நடத்திய சோதனையில் Ibarra ஆடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது, Bocanegr கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், Ibarra உறவுக்கு மறுத்ததால் தான் Bocanegr அவரை கொடூரமாக கொன்றதாக தெரியவந்துள்ளது.