தினமும் ஒரு கப் கேரட் சாப்பிட்டால் 3 வாரங்களில் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
கேரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது. அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது.
கேரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.
கேரட்டிலுள்ள பீட்டா கரோடின் நம் உடலை அடைந்தவுடன் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. இது கண்பார்வையை வலுப்படுத்துவதுடன் சரும பளபளப்பும் தருகிறது.
வாரம் 3 முறையாவது கேரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம்.