காமசாஸ்திரம் மற்றும் காமசூத்ரா ஆகிய இரண்டு பண்டைய இந்து நூல்களுக்கிடையேயான குழப்பம் குறித்து நிறைய விவாதங்கள் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான தெளிவான விளக்கம் என்னவெனில் காமாசாஸ்திரம் என்பது இந்திய இலக்கியமாகும் இது காம அறிவு மற்றும் ஆசைகளை கையாளுகிறது. அதேசமயம் காமசூத்ரா என்பது காமம் பற்றிய விளக்கங்களையும், நிலைகளை பற்றியும் கூறுகிறது.
காமசூத்ராவைப் போலல்லாமல், காமசாஸ்திரம் என்பது ஒரு நபரின் துணை மற்றும் அவர்களின் ஆளுமைகளுடன் பொருந்தக்கூடிய தன்மை பற்றிய ஆழமான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பற்றியதாகும். மேலும் இது ஒரு நபரின் முகம், ஆரா மற்றும் முழு உடல் பகுப்பாய்வு பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு வேத பாரம்பரியமான சமுத்திரிக சாஸ்திரத்தின் வரிகளை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி சிறந்த மனைவியாக இருக்கும் பெண்ணிடம் அடிப்படை குணங்கள் என்னென்ன என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த குணங்கள் இருக்கும் பெண்ணை திருமணம் செய்பவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார் என்று காமசாஸ்திரம் கூறுகிறது.
உடல் அறிகுறிகள்
சாமுத்ரிகா சாஸ்திரம் ஒருவரின் உடலில் இருக்கும் மச்சம், உடல் அடையாளங்கள், கால் வளைவுகள் மற்றும் குணாதிசயங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. இருப்பினும், காமசாஸ்திரம் ஆசை, காதல் மற்றும் பாலியல் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் திருமண பொருந்தக்கூடிய பண்புகளின் அறிகுறிகளை விளக்குகிறது. திருமணத்திற்கு பொருத்தமாக இருக்கும் பெண்ணின் குணங்கள் என்னென்ன என்று காமசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த குணங்கள் இருக்கும் பெண்ணை கண்ணை மூடிக்கொண்டு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று காமசாஸ்திரம் கூறுகிறது.
1
பெண்ணானவள் புத்திசாலித்தனம் மிக்கவராகவும், உலக நிகழ்வுகளைப் பற்றி கற்றுக் கொள்ளவும் வேண்டும், அவரின் படித்திருப்பது சமுதாயத்தையும் அவருடைய குடும்பத்தையும் அறிவொளி பெறுவதை உறுதி செய்கிறது.
2
ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவர்கள் யார் அவர்களின் நோக்கம் என்னவென்பதை சரியாக தீர்மானிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். மேலும் வாழ்க்கையின் கீழ் மற்றும் மேல் அடுக்குகளைச் சேர்ந்தவர்களுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் பழக்கூடியவராக இருக்க வேண்டும்.
3
பெண் தனது மதத்தை மதிக்கும் மற்றும் அனைத்து சடங்குகளையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். மேலும் தனது சமூக கடமைகளை நிறைவேற்றுவதில் எந்தவித தயக்கமும் காட்டக்கூடாது.
4
பெண்ணின் ஆராவானது தெய்வீகமானது. அவர் பணத்தை மிச்சப்படுத்துகிறார் மற்றும் லக்ஷ்மி தேவி போன்ற தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துகிறார்.அவரின் குரல் சரஸ்வதி தேவியைப் போல இனிமையானது மற்றும் தூய்மை நிறைந்தது மற்றும் பார்வதி தேவி போன்ற அவரது கணவனுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.
5
பெண் அனைத்து தீமைகளில் இருந்தும் விடுபட்டு நேர்மை கொண்டவராக இருக்க வேண்டும். அவர் தனது குடும்பத்திற்கு மந்திரி போல அறிவுரை செய்ய வேண்டும், தனது குடும்பத்தை தன்னுடைய இராஜ்ஜியம் போல கவனித்துக் கொள்ள வேண்டும்.
6
உடன்பிறப்புகளுடன் வளர்க்கப்பட்ட பெண் பூமாதேவியை போல பொறுமை கொண்டவராக இருப்பார். அவர் குழந்தைகளிடம் நன்றாக பழகுவார், பகிரும் குணம், உறவுகளை பாதுகாக்கும் எண்ணம் என அனைத்து நற்குணங்களும் அவர்களிடம் நிறைந்திருக்கும்.
7
ஒரு பெண் தன்னுடைய காதல் மற்றும் நெருக்கம் குறித்து சரியான புரிதலுடனும், ஆசையுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவரின் நயத்திற்காகவே ரசிக்கப்படுவார்.
8
அவர் தன்னைவிட வயதில் மூத்தவர்களை மரியாதையாடனும், அர்ப்பணிப்புடனும் நடத்த வேண்டும். அவர்களின் ஆலோசனையை பெற வேண்டும். தன்னுடைய நலனிற்காகவும், தன்னுடைய குடும்பத்தின் நலனிற்காகவும் அவர்களின் ஆலோசனையை பயன்படுத்த வேண்டும்.
9
சிறந்த சமையல் திறன்களையும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதற்கான தாராள மனப்பான்மையையும் கொண்ட பெண் சுற்றியிருக்கும் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.