கர்ப்பிணி அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்கள் நோய் மற்றும் ஆபத்து ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என குடும்ப நல சுகாதார பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது., .
குடும்ப நல சுகாதார பணியகத்தின் அறிக்கைப்படி, கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவ சிகிச்சைக்கு வராததால் பல ஆபத்தான நிலைமைகளை எதிர்கொண்டமை கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், பிறக்காத குழந்தையின் செயல்பாடு குறைதல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம், வலிப்புத்தாக்கங்கள் போன்ற ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தாய்மார்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில், இது அவசர விடயமாக இருப்பதால் சிகிச்சையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், நோய்வாய்ப்பட்ட தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்ப பதிவு ஊரடங்கு உத்தரவு உரிமமாக கருதப்படுகிறது.