கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெல்ஜியத்தில் முழுமையான முடக்கத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தனியார் வணிகம் ,அத்தியாவசிய நிலையங்கள் மற்றும் அழகு சாதன நிலையங்கள் திங்கள் முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நான்கு பேர் மட்டுமே கூட வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றும் பாடசாலை விடுமுறை நவம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க முடியும் மற்றும் வீட்டை விட்டு ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்.
ஏற்கனவே விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும்.
பெல்ஜியம் தற்போது ஐரோப்பாவில் அதிக தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது.
கொரோனாவின் முதல் அலைகளில் பெல்ஜியம் உலகின் மிக உயர்ந்த இறப்பு விகிதத்தையும் பதிவு செய்தது.
பெல்ஜியத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளர் கட்டில்கள் தற்போது பாதிக்கும் மேலாக நிரம்பியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“நாடு சுகாதார அவசர நிலையில் உள்ளது, மருத்துவமனைகள் மீதான அழுத்தம் மிகப்பெரியது, நாடு தேசிய அளவில் பூட்டப்பட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க இதுவே கடைசி வாய்ப்பு” என பெல்ஜியம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், பெல்ஜியத்தில் தொழிற்சாலைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன, என்றார்.
பெல்ஜியத்தில் தற்போது 392,258 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளதோடு மற்றும் 11,308 பேர் உயிரிழந்துள்ளனர்.