பிரான்சில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டாம் கட்ட பொது முடக்கத்தை மக்கள் சரியாக கடைபிடிக்கும் படியும், மீறினால் அபராதம் விதிக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேரமனி போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.
இதையடுத்து, பிரதமர் மேக்ரான்ன் நள்ளிரவு ஊரங்கு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார். அதன் படி இரவு 9 மணி முதல் காலை 6 வரை மக்கள் அத்தியாவசிய தேவை போன்றவைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை வரும் வியாழக் கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இதற்காக பொலிசார் சோதனைகளை முடக்கவிடப்பட்டுள்ளன. இதில் தேவையற்ற விதத்தில் மக்கள் வெளியே நடமாடினால் 5.000 யூரோ வரை அபராதம் செலுத்த நேரிடும், இந்த தகவலை உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.