கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க பல தரப்புக்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் மறு மதிப்பீடு செய்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் பேசிய நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த ஆண்டு தொடக்கத்தில், முஸ்லிம் குடிமக்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த விஷயத்தை மறுஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது.
வைரஸின் தன்மை மற்றும் COVID-19 ஐச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காத முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
ஆறு மாதங்கள் கழித்து இந்த முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களையும் தகனம் செய்வதற்கான நடவடிக்கையை மறு மதிப்பீடு செய்ய அரசாங்கம் இப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பது தொடர்பில் கடந்த ஆறு மாதங்களில், ஒரு குழுவை நியமிக்க அல்லது அனைத்து உடல்களையும் தகனம் செய்வதற்கான முடிவை மறுஆய்வு செய்ய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று குற்றம்சாட்டினார்.
இதுவரை ஒன்பது முஸ்லீம் குடிமக்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் இந்த விஷயத்தை ஆராயுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கக் கூடாது என்றும், முடிவை மாற்றியமைக்க முஸ்லிம் குடிமக்கள் அரசாங்கத்திடம் கோருகிறார்கள் என்றும் கூறினார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான முடிவு நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறினார்.
ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் ஒரு முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் வன்னியராச்சி குறிப்பிட்டார்.