தனது 14 வயது மகளிற்கு தற்காலிக கருத்தடை செய்து, தொலைபேசி காதலனுடன் வாழ அனுப்பிய தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியுடன் குடும்பம் நடத்திய காதலனும், சிறுமியின் தாயாரும் நேற்று முன்தினம் (1) உகண பொலிசார் கைது செய்யப்பட்டார்.
தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவி, தனமல்வில்ல பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனுடன் காதல் வசப்பட்டிருந்தார். தொலைபேசியின் தவறிய அழைப்பொன்றின் மூலம் இருவரும் காதல் வசப்பட்டிருந்தனர்.
தொலைபேசி காதலனுடன் பேசிய சிறுமியின் தாயார், இளைஞன் தொழில்புரிந்து வருவதால் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இளைஞனையும் வீட்டுக்கு அழைத்தார். தாயின் சம்மதத்துடன் இளைஞன் அந்த வீட்டில் தங்கியிருந்தார்.
சிறுமிக்கு தற்காலிக கருத்தடை சாதனம் ஒன்றை பொருத்திய தாயார், காதலனுடன் சேர்ந்திருக்க அனுமதித்துள்ளார்.
அதே வளவிற்குள் பிரிதொரு வீட்டை இளைஞன் கட்ட ஆரம்பித்ததும், அதற்குள் விரைவில் குடிபுக இருந்ததும் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
சிறுமியின் தந்தை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து சிறுமியின் 35 வயதான தாயாரும், 22 வயதான காதலனும் கைதாகினர்.