அமெரிக்காவில் மளிகை கடை வைத்திருக்கும் இந்தியர் மூன்று பேரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவின் Chanchalguda-வை சேர்ந்தவர் முகமது ஹாரிப் மொய்தீன் (37). இவர் அமெரிக்காவின் Georgiaவில் வசித்து வந்தார்.
மளிகை கடை நடத்தி வந்த முகமது சில தினங்களுக்கு முன்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொழில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த கொலை நடந்ததாக Georgia பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சோனி சூர்யவன்சம், அவர் காதலி லவுரா மற்றும் கோபி பின்ஹக்கா ஆகியோர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முகமதை மார்பு மற்றும் கை பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இதனிடையில் அமெரிக்காவுக்கு அவசர விசா மூலம் தன்னை உடனடியாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முகமதின் மனைவி மீனாஸ் பாத்திமா கோரியுள்ளார்.
அவர் கூறுகையில், நானும் என் தந்தையும் அவசர விசாவில் அமெரிக்காவுக்கு செல்ல மாநில அரசு உதவ வேண்டும், அங்கு சென்று என் கணவருக்கு இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டும்.
முகமது கடந்த 10 ஆண்டுகளாக அங்கு மளிகை வியாபாரம் செய்து வருகிறார்.
எங்களுக்கு 10 மாதங்களுக்கு முன்னர் தான் பெண் குழந்தை பிறந்தது.
சம்பவத்தன்று காலை 9 மணிக்கு என் கணவர் என்னிடம் போனில் பேசினார், பின்னர் அரை மணி நேரம் கழித்து போன் செய்வதாக கூறி துண்டித்துவிட்டார்.
ஆனால் பின்னர் எனக்கு அவரிடம் இருந்து போன் வரவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற தகவல் தான் வந்தது என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.