பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 492 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மே மாதத்திலிருந்து கணக்கிடும்போது, இதுதான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மிக அதிகம்.
இதற்கு முன், மே மாதம் 17ஆம் திகதி 500 பேர் இறந்ததுதான் தினசரி கொரோனா உயிரிழப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்தது.
அத்துடன், இங்கிலாந்து இரண்டாவது ஊரடங்கிற்குள் செல்லும் நிலையில், 25,177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு மருத்துவமனைகளின் தலைமை அதிகாரியான Simon Stevens கூறும்போது, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதால், மருத்துவ சேவை நான்காவது மட்டத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
நான்காவது மட்டம் என்பது, மருத்துவமனைகளால் முழுமையான சேவையை அளிக்க இயலாத அளவுக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தல் ஆகும் என அரசு மருத்துவமனை வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளதையடுத்து ஊரடங்கு அதிகாரப்பூர்வமாக நாளை அமுலுக்கு வருகிறது.