Loading...
பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதாக தான் இருக்கும்.
ஆனால் அவற்றை தவறான முறையில் சாப்பிட்டால், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தான் கேடு விளைவிக்கும்.
Loading...
தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- இறைச்சிகள், கோழி அல்லது கடல் உணவுகளை வாங்கி, அவற்றை உயர் வெப்பநிலையில் சமைக்கும் போது, அவற்றில் உள்ள புரோட்டீன்கள் மாற்றமடைந்து, ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாற்றுகிறது.
- தேனானது சேகரிக்கப்பட்ட பிறகு, பேஸ்சுரைசேஷன் செயல்முறை மூலம் அதில் உள்ள நச்சுக்களை அகற்றப்படுகிறது. இருப்பினும், கலப்படம் இல்லாத தேனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும், அது தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.
- பச்சை நிறத்தில் மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது, விஷத்தை சாப்பிடுவதற்கு சமம். ஏனெனில் இந்த உருளைக்கிழங்கால் வாந்தி, அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- பச்சை முந்திரியை சாப்பிடாதீர்கள். இவை விற்பனைக்கு வரும் முன் யூரோசியோல் என்னும் கெமிக்கல் கொண்டு வேக வைத்து, அதில் உள்ள பாய்சன் ஐவி நீக்கப்பட்டு தான் விற்கப்படுகிறது. எனவே கவனமாக இருங்கள். ஒரு கைக்கு அதிகமான அளவில் முந்திரியை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
- கசப்பான பாதாமில் ஹைட்ரஜன் சயனைடு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 5-10 கசப்பான பாதாமை சாப்பிட்டால், அது பெரியவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
- வெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.
- பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. இதனை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- பாலிலும் சில அபாயங்கள் உள்ளன. தினமும் பாலை குடித்து வந்தால், பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் குறைவதோடு, இதன நோன் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக பெண்கள் பால் குடிப்பது, கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆண்கள் குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும். எனவே பாலை சரியான அளவில் தினமும் குடித்து வாருங்கள்.
- கடல் சிப்பியை சரியாக சமைக்காமலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தானதாகிவிடும். எனவே கடல் சிப்பியை சாப்பிடுவதாக இருந்தால், நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின் சாப்பிடுங்கள்.
Loading...