Loading...
இன்றைய காலத்தில் பலருக்கும் முடி உதிர்வதால் இளவயதிலேயே வழுக்கை விழுகிறது.
ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரிசெய்தாக வேண்டும், இதற்கான டிப்ஸ்,
Loading...
முடி உதிர்வை தடுக்கும் வழிகள்
- ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நீரில் வேகவைத்து, பின் அந்த நீரை ஒரு நாள் கழித்து தலைக்கு ஊற்றி கழுவி வந்தால் கொத்தாக முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
- தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயப் பொடி, குன்றிமணி பொடி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்றாக வளரும்.
- கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடிகளை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், நீளமாக முடி வளரும்.
- ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்து அதை தூள் செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து அதை காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக வளரும்.
- காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி தலை முடிக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாக, அடர்த்தியாக வளரும்.
- அதிமதுரத்தை, தண்ணீரில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, பின் 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
- கேரட் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து, பின் அதை நன்றாக காய்ச்சி அந்த எண்ணெயை வாரம் மூன்று நாட்கள் தலையில் தேய்த்து குளித்தால், நன்றாக முடி வளரும்.
Loading...