பேருவில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை மீண்டும் உயிர்த்துள்ளது. தற்போது இந்த எரிமலையிலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல்களும், புகைகளும் கக்கப்பட்டு வருகின்றன.
பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2500 மீட்டர் வரையில் சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்ததாகவும் தற்போது 3500 மீட்டர் வரை வேகமான புகைகளும், சாம்பல்களும் கக்கப்பட்டு வருவதாகவும் பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த எரிமலையின் உயிர்ப்பினால் பெருவின் கபானாகொடே, டாபே, லாரி, மற்றும் அச்சோமா பகுதிகள் வெகுவாக பாதிப்புற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபன்கயாவின் திடீர் எழுச்சியானது சிலவேலை பாரிய எரிமலை எழுச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளதாக ஆய்வியல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.