தூக்கம் வரமாட்டேங்குது என்று சொல்பவரா நீங்கள்? தூக்கமின்மை என்பது நாம் அனைவருமே இரவில் சிக்கித்தவிக்கும் ஒரு பிரச்சனை. புரண்டு புரண்டு மடிச்சு சுருங்கி எப்படி முயன்று படுத்தாலும் மணிக்கணக்கில் தூக்கம் வருவதில்லை.
தூக்கம் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் என்பதோடு சரியாக உறங்கவில்லையென்றால் அன்றைய நாளே பாழாகிவிடும் வாய்ப்புண்டு. நாம் இப்போது இந்த பிரச்சனையைப் வீட்டிலேயே உள்ள செய்முறைகள் மூலம் போக்கி முற்றுப் புள்ளி வைப்பது எப்படி என்பதை பார்க்கவிருக்கிறோம்.
இது இந்தியாவில் ஒரு சிறந்த தூக்கம் வரவழைக்கும் தீர்வாக கருதப்படுவதுடன் உடம்பிற்கும் எந்த பக்க விளைவுகளும் இன்றி ஒய்வை அளிக்கக் கூடியது.
தூக்க மாத்திரைகள்
உண்மையில், தற்போது கிடைக்கும் தூக்க மாத்திரைகள்தான் நீடித்த தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு தூக்கம் தொடர்பான குறைபாடுகளுக்கு காரணமாக உள்ளன. பெரும்பாலான தூக்க மருந்துகள் பல்வேறு பிந்தைய மற்றும் பக்க விளைவுகளுடன் வருவதோடு பின்னாளில் பல உடல்நல தொந்தரவுகளைத் தரக்கூடியவை. இங்கே தரப்பட்டிருக்கும் வீட்டுக் குறிப்பு இந்த தூக்கமின்மை தொந்தரவிற்கு உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
வாழைப்பழ டீ :
தூக்கத்திற்கு செல்வதற்கு முன் உங்களுக்குத் தேவையானதெல்லாம் வாழைப்பழம் மட்டும்தான். வாழையில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவு இருப்பதால் இவை தூக்கத்தைக் கெடுக்கும் தொந்தரவுகளைக் குறைத்து ஒய்வளிக்கும். மேலும் இந்த கனிமச் சத்துக்கள் தசைகளுக்கு ஆறுதலளிக்கின்றன. இந்த சுவையான டீயை தூங்கச் செல்லும் முன் பருகுங்கள்.
தேவையானவை :
ஒரு இயற்கையாய் கனிந்த வாழைப்பழம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சிறிதளவு இலவங்கப் பட்டை
தயாரிக்கும் முறை
வாழைப்பழத்தை தோலுரித்து அதை பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு பத்து நிமிடத்திற்குக் கொதிக்க விடவும். பின்னர், சிறிதளவு இலவங்கப்பட்டையை இதில் சேர்க்கவும்.
பின்னர் இதை வடிக்கட்டி உறங்கச் செல்லும் முன் பருகவும். இது உங்களுக்கு நல்ல ஆறுதல் அளித்து ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும்.