உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் செல்லாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படும். அப்பேற்பட்ட இரத்தம் அசுத்தமாக உடலினுள் சுற்றிக் கொண்டிருந்தால், உடலுறுப்புக்கள் இன்னும் மோசமாக பாதிப்பிற்குள்ளாகும்.
ஆகவே அடிக்கடி இரத்தத்தை சுத்தம் செய்யும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
கேரட் – 5 எலுமிச்சை – 2 வெள்ளரிக்காய் – 1 ஆரஞ்சு – 1 இஞ்சி – 1 துண்டு மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை #1
முதலில் வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி போன்றவற்றின் தோலை நீக்கிவிட வேண்டும்.
செய்முறை #2
பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டிக் கொண்டால், ஜூஸ் ரெடி!
பயன்படுத்தும் முறை:
நிபுணர்கள் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நிச்சயம் இந்த பானத்தை ஒருவர் குடித்தால், உடலினுள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். இதர நன்மைகள் இந்த ஜூஸக் குடித்தால், இரத்தம் சுத்தமாவதுடன், உடலினுள் உள்ள உட்காயங்கள் குணமாகி, உடலில் ஏற்படும் வலிகள் தடுக்கப்படும்.