தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் தனது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் எளிமையாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதனால் திருமணத்தின் போது அவரது திருமண புகைப்படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால் திருமணம் முடிந்த பின், காஜல் தனது திருமணத்தின் போது எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண வரவேற்பின் போது காஜல் அணிந்திருந்த உடை தேவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. காஜல் தனது திருமண நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த ஒவ்வொரு உடையும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்ததாகும்.
கீழே காஜல் அவர்வாலின் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் அவர் மேற்கொண்ட ஸ்டைல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபால்குனி ஷேன் பீக்காக் லெஹெங்கா
காஜல் அகர்வால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ஃபால்குனி ஷேன் பீக்காக் வடிவமைத்த கவர்ச்சிகரமான கோல்டன் நிற நீளமான லெஹெங்கா உடையை அணிந்திருந்தார். இந்த லெஹெங்கா அற்புதமான எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.
ஃபிஷ் டெயில் பாவாடை
வரவேற்பு நிகழ்ச்சிக்கு காஜல் அணிந்திருந்த லெஹெங்காவின் பாவாடையானது ஃபிஷ் டெயில் டிசைன் கொண்டிருந்தது மற்றும் மணப்பெண் உணர்வைத் தரும் நீளமான துப்பட்டாவும் உடையின் பின்புறத்தில் இருந்தது.
மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
காஜல் அகர்வால் இந்த உடைக்கு பொருத்தமாக மேட் மேக்கப் போட்டிருந்தார் மற்றும் இந்த உடையில் அற்புதமான தோற்றத்தைத் தரும் வகையில் நேர் உச்சி எடுத்து ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.
ஆபரணங்கள்
காஜல் இந்த கோல்டன் நிற அழகிய லெஹெங்காவிற்கு கழுத்தில் சோக்கர் நெக்லேஸ் மற்றும் கைகளில் சிவப்பு நிற சூடா அணிந்திருந்தார்.
கவுதம் கிட்சுலு தோற்றம்
காஜல் அகர்வாலின் கணவரான கவுதம் கிட்சுலு திருமண வரவேற்பிற்கு கருப்பு நிற டாக்ஷிடோ அணிந்திருந்தார். இது காஜல் அகர்வாலின் உடைக்கு பொருத்தமான தோற்றத்தைக் கொடுத்தது.
ரொமான்டிக் தம்பதிகள்
இது திருமண வரவேற்பின் போது ரொமான்டிக்கான போஸில் காஜல் மற்றும் கிட்சுலு கொடுத்த போஸ். இதுவும் காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்களில் ஒன்றாகும்.
வீட்டு பூஜை
இது காஜல் மற்றும் கவுதம் கிட்சுலு திருமணத்திற்கு பின் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடர புது வீட்டில் பூஜை நடக்கும் போது எடுத்த போட்டோ.