ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக கேப்டன்சி செயது வரும் கோலி மீது ஆர்சிபி அணி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே இந்த தொடரில் மீதம் உள்ளது.
இன்று நடக்கும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்ல போகும் அணி எது என்று உறுதியாகிவிடும். இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி.. எலிமினேட்டர் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது.
என்ன
பெங்களூர் அணி இந்த சீசனின் தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும்.. கடைசில் போக போக சொதப்பியது. அதிலும் கடைசியில் வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து பெங்களூர் அணி தொடரை விட்டு வெளியேறியது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் மோசமாக கேப்டன்சி செயது வரும் கோலி மீது ஆர்சிபி அணி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஏன் இப்படி
பெங்களூர் அணி வலுவான முடிவுகளை எடுக்காமல் போனதுதான் இந்த தோல்விக்கு காரணம் என்கிறார்கள். ஒரு கேப்டனாக கோலி வலுவான சில முடிவுகளை எடுக்கவில்லை. உதாரணமாக பெங்களூர் அணியில் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனால் அதன்பின் பேட்டிங் செய்ய யாருமே இல்லை.. அந்த அணியில் நல்ல பினிஷர் இல்லை. ஆனால் இதற்கு கோலி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மோசம்
துபே போன்ற பார்ம் அவுட் வீரர்களிடம் கோலி பினிஷரை தேடிக்கொண்டு இருந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கோலி இந்த தவறை பெங்களூர் அணியில் நீண்ட வருடமாக செய்து வருகிறார். தொடக்கத்தில் பெங்களூர் அணியில் ஓப்பனிங் சரியில்லை, ஆனால் அதை பல சீசன்களுக்கு கோலி மாற்றவே இல்லை . அதேபோல் பவுலிங்கும் அந்த அணியில் சரியில்லை.. அதையும் கூட பல வருடங்களுக்கு மாற்றவில்லை.
பேட்டிங் எப்படி
இந்த சீசனில் பெங்களூர் அணியின் பினிசிங் ஆர்டர் சரியில்லை என்று கோலிக்கு தெரியும். ஆனால் சீசன் முழுக்க அதற்காக கோலி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு உறுதியான பிளேயிங் 11 உடன் கோலி களமிறங்கவே இல்லை. தேவையில்லாத அணி மாற்றம், மொயின் அலி போன்ற வீரர்கள் அணிக்குள் வந்தது.. என்று கோலி நிறைய தவறான முடிவுகளை அடுத்தடுத்து எடுத்தார்.
கோபம்
கிட்டத்தட்ட கடந்த 10 சீசனாக கோலி இப்படித்தான் அணிக்குள் தவறான முடிவுகளை எடுத்து வந்தார். இதனால் அணி நிர்வாகம் கோலி மீது கடும் கோபத்தில் உள்ளது என்கிறார்கள். அணியில் அனைத்தையும் மாற்றிவிட்டோம், வீரர்களை மாற்றிவிட்டோம், பயிற்சியாளர்களை மாற்றிவிட்டோம்.. ஆனாலும் அணி தோல்வி அடைகிறது. இதற்கு காரணம் களத்தில் கேப்டனாக கோலி எடுக்கும் தவறான முடிவுகள்தான் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
மினி ஆக்சன்
இதனால் அடுத்த சீசனில் பெங்களூர் அணியில் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் ஆரோன் பிஞ்சை கேப்டன் பதவிக்கு பெங்களூர் அணுகும் என்று கூறப்படுகிறது. பின்சை அணிக்குள் கொண்டு வந்ததே இதனால்தான் என்றும் கூறுகிறார்கள்.
மாற்றம்
கோலியின் ஆட்டத்தை பார்த்துவிட்டு அடுத்த முறை கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்றுதான் பின்சை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அடுத்த சீசனில் பெரும்பாலும் ஆர்சிபி கேப்டன்சியில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் அணிக்குள் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக நீடிப்பார் என்றும் கூறுகிறார்கள்.