Loading...
தற்போது உள்ள நவீன கால பெண்கள் தங்களுடைய விரல்களை அழகு படுத்த அடிக்கடி நெயில் பாலிஷ்-ஐ பயன்படுத்துகின்றனர்.
வாரத்திற்கு ஒரு முறையாவது நெயில் பாலிஷ் பயன்படுத்தும் முறையை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சில பெண்கள் விதவிதமான கலரில் நெயில் ஆர்ட் செய்துகொள்ள விரும்புகின்றனர்.
Loading...
ஆனால் உண்மையாகவே நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரத்திற்கு பிறகு நம் உடலில் என்னெல்லாம் நடக்கும் தெரியுமா?
ஒரு ஆய்வில் நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்தும் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
விளைவுகள்
- நெயில் பாலிஷை நாம் நேரடியாக உபயோகிக்கும் போது இது தோல் நோய்களை உருவாக்கும். அலர்ஜி, தேமல், அரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- நெயில் பாலிஷை நகங்களுக்கு போட்டுகொண்டு நம் கைகளை முகம், கண்கள், மூக்கில் நுகர்வது போன்ற வேலைகளை நாம் செய்யும் போது இதில் உள்ள வேதிப்பொருள் நம் உள்ளுக்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த சாயங்களை நகத்தில் பூசிக்கொண்டு நாம் நம் கைகளால் உணவு உண்டால் அது நம் உடலுக்குள் சென்று வயிற்று உபாதைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
- இதன் காரணமாக நமக்கு தொண்டை அலர்ஜி, தொண்டை எரிச்சல் , வாந்தி, குடல் புண், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
- இதை அதிகமாக நுகர்ந்தால் பெயின்டர் சின்ட்ரம் என்னும் நோய் வரும். இந்த நோய் நம்மை தாக்கும்போது பேசுவதில், நடப்பதில் சிரமம், ஞாபகசக்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் வர காரணமாக அமைகிறது.
- நுரையீரல் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் நெயில் பாலிஷை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு குழந்தையின்மை என்னும் பிரச்சனை அதிகமாக வரக்கூடும். ஆகவே இயற்கை முறையில் கிடைக்கும் நெயில் பாலிஷை உபயோகியுங்கள்.
- பாட்டிலில் வாட்டர் பேஸ்டு என்று குறிப்பிடப்பட்டுள்ள நெயில் பாலிஷை வாங்கி உபயோகிப்பது சிறந்தது. குறைவான விலையில் கிடைக்கும் நெயில் பாலிஷில் தரமற்ற கெமிக்கலை சேர்த்திருப்பார்கள் .ஆகவே அதிக விலையாக இருந்தாலும் வாட்டர் பேஸ்டு நெயில் பாலிஷை உபயோகிக்கும் போது பின் விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.
Loading...