திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை,திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் தாயாரும் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியினைச் சேர்ந்த என். நாகேஸ்வரி (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேர் கடந்த 06 திகதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மகள் என். விதூசிகா (16 வயது) அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றுள்ளது.
இதைவேளை அவரது தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த என்.வைஸ்னவீ (12வயது) ,என். ஐஸ்வர்யா (08வயது) மற்றும் என். கஜவீர் (02வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் நஞ்சு அருந்தியமைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும், தந்தை இரண்டாவது திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.