மன்னாரில் கிராம சேவகர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சக கிராம சேவகரின் கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அவரது உறவினரும் கைதாகியுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி இலுப்பைக் கடவை ஆத்திமோட்டைப் பகுதியல் வைத்து குறித்த கிராம சேவகர் இனந்தெரியாதோரால் அடித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையிலையே பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட கிராம சேவகருடன் பணியாற்றும் சக பெண் கிராம சேவரின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரும், கைதானவரும் ஒரே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.
அத்துடன், கைதானவரின் உறவினரான இன்னொருவரும் கைதாகியுள்ளார். அவர் மாடு மேய்ப்பவர். நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.