சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி 6 மாதங்களுக்குக் கூட நீடிக்காது என்று அரசியல் கட்சிகள் ஆரூடம் கூறின.
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக விஜயகாந்த் விலகினார். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறுகின்றனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்கள் நலக்கூட்டணி நீடிக்காது என கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நான் கூறியிருந்தேன்.
இன்றைக்கு அது உண்மையாகி உள்ளது. அன்றைக்கு அந்த கூட்டணியை உருவாக்கியவரும் வைகோ, இன்றைக்கு அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை நட்டாற்றில் விட்டு விட்டு கூட்டணியை விட்டு வெளியே வந்த வரும் வைகோதான். வைகோ அடிக்கடி நிலை மாறுபவர் என்பதை நிரூபித்துள்ளார் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.