இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அந்த பெண்ணிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணுடன் உல்லாசம்
மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்தவர் சகூர்கான் (வயது45). தொழில் அதிபர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை தனது காமவலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்தார். மேலும் ரகசியமாக படம் பிடித்து அதை காட்டி மிரட்டி கடந்த 6 மாதமாக அப்பெண்ணை கற்பழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.
தொழில் அதிபர் கைது
இதையறிந்த சகூர்கான் இளம்பெண்ணுக்கு பேசி முடித்த வாலிபரின் செல்போனுக்கு இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சியை அனுப்பி வைத்து இருக்கிறார். இதை பார்த்து அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக இளம்பெண்ணின் திருமணமும் நின்றது.
இதனால் மனமுடைந்த இளம்பெண் பெற்றோருடன் சாக்கிநாக்கா போலீஸ் நிலையம் சென்று சகூர்கான் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகூர்கானை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.