பொதுவாக பிறக்கும் குழந்தைகள் தான் பிறந்த பின்பு மொழிகளைக் கற்றுக் கொள்வது இல்லை. அப்பறம் எப்படி என்று யோசிக்கிறீங்களா?… குழந்தைகள் தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே, வெளியில் கேட்கும் அனைத்து சப்தங்களையும் குரல்களையும் கற்றுக் கொள்கிறதாம்.
இவ்வாறு மனிதர்களாக கூறிக்கொள்வது இல்லை. சமீபத்தில் வெளியான ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வே இவ்வாறு கூறுகிறது.அவர்கள் இதற்கு உதாரணமாக கூறுவது என்னவென்றால், பிறந்த குழந்தைகள் தங்களின் அம்மாவின் குரல் மட்டும்தான் விரும்புவார்களாம், புரிந்தும் கொள்வார்களாம். இதற்கு காரணம், குழந்தைகள் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே, தாயின் குரலை உள்வாங்கிக் கொண்டு நியாபகம் வைத்துக்கொள்கிறார்கள் என்கின்றனர் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகள்.
30 ஜெர்மனி மற்றும் 30 ப்ரெஞ்சு, மொத்தம் 60 பிறந்த குழந்தைங்களோட அழுகையை கவனமாக பதிவு செய்து பார்த்ததில் ப்ரெஞ்சு குழந்தைகள் மட்டும் அழும் போது, சற்று ஓங்கிய குரலோட அழுதுள்ளனர். ஆனால், ஜெர்மனிய குழந்தைகள் சற்று தாழ்வான குரலிலேயே அழுதுள்ளனர்.
இந்த அழுகையில் இருக்கும் மாற்றம், அந்தந்த மொழிக்குறிய இயல்பையே காட்டுவதாக ஆய்வினை மேற்கொண்ட வெர்ம்கே கூறியுள்ளார். மேலும் தாயின் வயிற்றிலிருக்கும் சிசு,வெளியில் கேட்கும் சப்தங்களை கூர்ந்து கவனித்து நியாபகம் வைத்துக் கொண்டும், பிறந்த பின்பு அழும் பொழுது அதையே மீண்டும் செய்கிறார்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.