இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன என்ற 36 வயதான இளைஞன் குயின்ஸ்லாந்தின் 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியர் என்ற விருதை பெற்ற தகுதிபெற்றுள்ளார்.
டாக்டர் பலிபன OAM கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த பணியாளராவார்.
அவுஸ்திரேலியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியப் பட்டம் பெற்ற நபர் என்ற பெருமையை இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன பெற்றார்.
இந்த விருதுக்கான தினேஷ் பலிபனவின் பெயர் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
இவ்விருதைப் பெற டாக்டர் தினேஷ் பலிபனவுக்கு எந்த தடையும் கிடையாது, அவர் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் நபர் என்று குயின்ஸ்லாந்தின் ஆஸ்திரேலியருக்கான விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதியானவர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் பலிபன குயின்ஸ்லாந்தில் முதல் நாற்காலி மருத்துவ பட்டதாரி மற்றும் மருத்துவ பயிற்சியாளர் ஆவார்.
2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்திய கற்கையை மேற்கொண்டு வந்த போது ஏற்பட்ட விபத்தில் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
பிலிஸ்பேனில் வசிக்கும் அவரது பெற்றோரை சந்திக்க சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தினேஷ் பலிபனவின் வைத்திய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்தார்.
வைத்தியராக வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து பட்டம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.