Loading...
டிசம்பரில் பணத்தட்டுப்பாடு, பொங்கலில் ‘பைரவா’ ரிலீஸ் ஆகிய காரணங்களால் ஜனவரி இறுதிக்கு தள்ளி போனது சூர்யாவின் ‘எஸ் 3’. ஆனால் அதே தேதியில் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ‘எஸ் 3’ தள்ளி போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து ‘எஸ் 3’ படக்குழுவினர் கூறியபோது ஜனவரி 26ல் கண்டிப்பாக படம் வெளியாகும் என்று உறுதி கூறியுள்ளனர்.
Loading...
இந்நிலையில் ‘சிவலிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இந்த படத்தை ஜனவரி 26-ல் வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி, உள்பட பலர் நடித்துள்ளனர்.
Loading...