மாத்தளை – தொறக்கும்புற கிராம சேவை பிரிவுக்குட்பட்ட துணுக்கோலவத்த கிராமத்தில் வீடுகளில் சுவர்களிலும் தரைகளிலும் திடீரென பாரிய வெடிப்பு காணப்படுவதாக மாத்தளை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிரதேசவாசிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.
சுமார் 30ற்கும் மேற்பட்ட வீடுகளில் இவ்வாறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து கிராம சேவை அதிகாரி ஊடாக தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது.
இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் செயலாளர் காரியாலயம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இப்பிரதேசத்தில் நிலத்திற்கு கீழ் சுண்ணாம்புக்கல் காணப்படுவதாகவும் நிலத்தடி நீர் பிரவாகம் இப்பகுதியில் ஊடாக செல்வதாலும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.