ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300,000ஐ தாண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.8 மில்லியனாக அதிகரித்துள்ளது.
குளிர்காலம் நெருங்குவதால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கடந்த வாரம் நாள்தோறும் சராசரியாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இதில் புதிய முடக்க நிலையை அமுல்படுத்தி இருக்கும் பிரிட்டனில் ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக சுமார் 49,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 20,000 புதிய தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளன. எனினும், அமெரிக்காவின் பைசர் நிறுவனம் வைரஸ் பரவலுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து குறித்து அறிவித்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.