புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபார விரோதங்கள் அகலும். வீடு கட்டும் பணிக்கு வித்திடுவீர்கள். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.
பணவரவு பெருக பக்கத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். நூதன பொருள்வரவு உண்டு.
வி.ஐ.பி.க்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் எண்ணம் மேலோங்கும். நெடுநாள் பிரச்சினையொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரும்.
செல்வாக்கு உயரும் நாள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
தடைகள் அகலும் நாள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும். நூதனப் பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வந்து சேரும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளம் மேலோங்கும்.
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். சகோதர வழி சச்சரவுகள் அகலும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொன் பொருள் வாங்கப் புதிய திட்டம் தீட்டும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.