புதிய ஆய்வொன்று சுவாசம் நம் உயிர்வாழ்வதற்கென நுரையீரல்களை நிரப்புவது மட்டுமல்லாது, நாம் சிந்திக்கும், உணரும் தன்மைகளையும் பாதிப்பதாக சொல்கிறது.
அதாவது நாம் சுவாசிக்கும் சந்தமானது மனித மூளையில் மின் தூண்டல்களை ஏற்படுத்ததுகிறது. அத்தோடு அதன் விளைவு நாம் உட்சுவாசிக்கும், வெளிச்சுவாசிக்கும், வாய், உதடுகளை அசைக்கும் தன்மையுடன் பெருமயவில் சார்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மூளையின் செயற்பாட்டிற்கும், சுவாசத்திற்கும் இடையிலான தொடர்பை அறிய Northwestern University ஆய்வாளர்கள் 7 நோயாளிகளின் electroencephalography (EEG) இனை ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது மூளையின் செயற்பாடு, சுவாசிக்கும் முறையைச் சார்ந்திருந்தது அறியப்பட்டது. இசட் செயற்பாடு மூளையின் 3 வெவ்வேறு பகுதிகளில் அறியப்பட்டிருந்தது.
Piriform (olfactory) cortex இது மணத்தை அறியும் இடமாகும். Hippocampus இது ஞாபக சக்தியை கட்டுப்படுத்துகிறது. Amygdala இது உணர்வுகளுடன் சம்மந்தப்பட்டது.
மேற்படி 3 பகுதிகளில் Amygdala மற்றும் Hippocampus பகுதிகளில் உட்சுவாசத்தின் போது பெரியளவு மாற்றம் அறியப்பட்டிருந்தது.
The Journal of Neuroscience பக்கத்தில் இவ் ஆய்வு தொடர்பான விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.