துரித உணவுகளின் அதிகரிப்பால் உடல் பருமன் மற்றும் ஊளைச்சதை பிரச்சனையால் மனிதன் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளான்.
எனவே, ஊளைச்சதையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பின்பற்றுங்கள்,
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்
பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.
இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.