Loading...
இரு மனங்கள் ஒன்றுபடும் காதல், மிகவும் புனிதமானது.
இத்தைகைய இனிமையான தங்களின் காதல் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், சில புதிய செயல்களை தீர்மானமாக எடுத்துக் கொண்டு செய்வதால், அதுவே நம் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.
Loading...
எனவே தங்களின் இனிமையான காதல் வாழ்க்கையானது, வரும் 2017-ல் பிரகாசமாக ஒளிர்வதற்கு ஒருசில விஷயங்களை நாம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
2017-ல் வாழ்க்கை பிரகாசிக்க செய்ய வேண்டியவை
- ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த சில உணர்வுகள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அந்த வகையில், இசைகள், வேலைகள், எழுதுதல் இது போன்றவை கூட இருக்கலாம். இந்த விஷயங்களை தன் துணையிடம் பகிர்ந்துக் கொள்வது மகிழ்ச்சியை தருவதோடு ஆர்வமாகவும் இருக்கும்.
- தனக்கு பிடித்த செயல்களை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று தன் துணையிடம் அடம்பிடித்து, சண்டை போடுவது இது போன்ற தன்னலம் மிக்க உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
- புதிய வருடத்தின் தொடக்கம் ஆரம்பம் ஆகும் போது, இது வரை செல்லாத சில சுற்றுலா தலங்கள் இது போன்ற மனதை மகிழ்விக்கும் இயற்கை வளங்கள் நிறைந்த சில இடங்களுக்கு இருவரும் சேர்ந்து செல்வது இருவருக்குமே மனமகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும்.
- சமூகத்தில் மனஅமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை இழந்து, பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், பெரியவர்கள், இவர்களை போன்ற முடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த பணம் அல்லது உணவுகளை கொடுப்பது போன்ற உதவிகளை தன் துணையுடன் சேர்ந்து செய்யலாம்.
- நம் வாழ்வில் ஏதேனும் கஷ்டங்கள் இருந்தால், அதை மறந்து தன் துணையுடன் இருக்கும் போது, அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசுவது, ஜோக் செய்வது போன்று பேசி அவர்களின் மன நிலையை சந்தோஷமான தருணத்திற்கு மாற்ற வேண்டும்.
- நாம் வாழும் இந்த புனிதமான உறவில், தன் துணையிடம் அல்லது மற்றவர்களிடம் எதேனும் மனம்புண் படும்படி பேசியிருந்தால், அதை மறந்து மீண்டும் அந்த தவறை செய்யாமல் திருத்திக் கொள்ள வேண்டும்.
- தினமும் காலையில் தங்களின் மனது அமைதி நிலையை அடைவதற்கும், சுறுசுறுப்பாக இருப்பதற்கும், இருவரும் ஒன்றாக சேர்ந்து ஜிம்க்கு செல்வது அல்லது வீட்டின் இயற்கை நிறைந்த இடங்களில் அமர்ந்து யோகா செய்வது போன்று செய்தால், இருவருடைய மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- தன்னுடைய துணைக்கு எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டும். எப்போதும் அவர்களுடன் திறந்த மனதுடன் பேசுவதுடன் உண்மையான அன்பை செலுத்துவது, மேலும் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரிடமுமே அன்பாக, பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும்.
Loading...