கொரோனோ நோய்த் தாக்கம் வியாப்பித்துள்ள தற்போதைய நிலையில் மட்டக்களப்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. அதுபோல் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஏறாவூர் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்கு புகையிரதம் மூலம் ஆற்றுமண் ஏற்றிக் கொண்டு செல்லும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். லொறிகளில் ஏறாவூர் புகையிரத நிலயத்திற்கு மணல் கொண்டு வரப்பட்டு அங்கு குவிக்கப்பட்டு அதன் பின்னர் பெக்கோ இயந்திரம் மூலம் புகையிரதத்தில் பொருத்தப்பட்டுள்ள கெண்டயினர்களில் ஏற்றப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த ஒரு மாத காலமாக வாராந்தம் சுமார் இரண்டு தடவைகள் வீதம், ஒருதரத்தில் சுமார் 20 கெண்டயினர்களில் இவ்வாறு மட்டக்களப்பிலிருந்து மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு புகையிரதம் மூலம் யார் முன்னின்று மட்டக்களப்பிலிருந்து மணல் ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பது இதுவரையில் புலப்படவில்லை எனவும் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.