மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசறி விக்ரமநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ரத்னசறி விக்ரமநாயக்கவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபத்தையும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் பிரதமர் காலமானார்.
முன்னாள் பிரதமர் ரத்னசறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.