தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(29) கைது செய்யப்படலாம் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் விமல் இன்றைய தினம் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விமலிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்காக 125 கேள்விகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தயாரித்து வைத்திருந்தனர் எனவும் ஆனால் அவர் நேற்றைய தினம் ஒரு சில கேள்விகளுக்கே பதிலளித்துள்ளார் எனவும் நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் கேள்விகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் விமல் வீரவங்ச இன்றைய தினம் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.