பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளை பெற்ற யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ச.ஆர்வலன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நான் 2020 ம் ஆண்டுதரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்றுள்ளேன் என்னைப்போல் பரீட்சைக்கு தோற்றிய எமது பாடசாலை மாணவர்கள் அதிகளவானோர் சித்தியடைந்துள்ளார்கள்
அதேபோல் இந்த பரீட்சையினை பொறுத்தவரைக்கும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கு சென்றாலும் வீட்டில் அதனை மீட்டு படிப்பதன் மூலமே பரீட்சையில் இலகுவாக சித்தி அடைய முடியும்.
அத்தோடு 195 புள்ளி பெறுவதற்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோருக்கு தனது நன்றிகளையும் குறித்த மாணவர் தெரிவித்தார்.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை புலமைப் பரிசில் பெறுபேற்றினை கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.மகேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 57 வீதம் மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் இவ்வருடம் 63 வீதமானவர்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.