ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
துபாய் ,சார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்கள் பிசிசிஐ மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு 8 அணிகளும் அணி வீரர்கள் ஊழியர்கள் அனைவரும் துபாயில் உள்ள மிகப்பெரிய சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டது. வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இது அனைத்திற்கும் பிசிசிஐ எத்தனை கோடி செலவு செய்திறுக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில், மூன்று மைதானங்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை கட்டணமாக பிசிசிஐ செலுத்தியுள்ளதாகவும்,
இது தவிர 8 அணிகளும் தனித்தனியே விடுதிகளில் தங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பெரிய வருமானம் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் போட்டி நடைபெற்றாலும் 8 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்தும் அப்படி இருந்தும் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் .
அதே நேரத்தில் ஒரு போட்டி நடத்தும் போது ஒரு கோடி ரூபாய் வரை இந்தியாவில் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படிப்பார்த்தால் மொத்தம் 60 போட்டிக்கு தற்போது 100 கோடி ரூபாயை பிசிசிஐ கட்டணமாக செலுத்தி இருக்கிறது. இது கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.