துருக்கியில் வசித்து வரும் உலகிலேயே மிக உயரமான பெண்ணான Rumeysa Gelgi-யின் தன்னுடைய வாழ்க்கையை சக்கர நாற்காலியிலே கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள Safranbolu என்ற நகரத்தில் வசித்து வரும் பெண் Safiye Gelgi. இவருக்கு கடந்த 1997ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது, இவளுக்கு Rumeysa Gelgi என பெயர் சூட்டினர்.
மிக மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, Rumeysa Gelgiன் வளர்ச்சி பிறப்பிலிருந்தே சாதாரண குழந்தைகளை விட அதிகமாக இருந்து வந்துள்ளது.
தற்போது இவருக்கு பத்தொன்பது வயதாகிறது, அவர் ஏழு அடி உயரத்தில் தற்போது இருக்கிறார்! Weaver Syndrome என்ற விசித்திர நோயால் தான் இவருக்கு இந்த வளர்ச்சி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.
இதுபற்றி அவர் கூறுகையில், சிறுவயதிலிருந்தே என்னை எல்லாரும் விசித்திரமாக பார்ப்பார்கள். எனக்கு ஆறு வயது ஆன பின்னர் தான் இதை நான் உணர்ந்தேன் என கூறியுள்ளார். அதிக உயரத்தால் முதுகெலும்பு பிரச்சனையால் அவதிப்படும் Rumeysa Gelgiன் சக்கர நாற்காலி, ஊன்று கோல் உதவியுடன் தான் வாழ்ந்து வருகிறார், இவரின் பெற்றோர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.