சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு தான் சொக்லேட்.
என்னதான் விலை அதிகமாக இருந்தாலும், அதனை எந்த விலை கொடுத்தாலும் வாங்கி ருசிப்பதற்கு மனிதர்கள் தயங்குவதில்லை.
சொக்லேட்கள் தயாரிக்கப்படும் தரத்தின் அடிப்படையில் அதன் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன,
அந்த வகையில் உலகிலேயே விலையுயர்ந்த சொக்லேட்கள் இதோ,
To’ak Chocolate
சிகாகோவை சேர்ந்த Jerry Toth என்பவரே . To’ak நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். இந்த சொக்லேட்டின் விலை $260 ஆகும். To’ak நிறுவனம் 81 சதவீதம் டார்க் சொக்லேட்டை தான் தயார் செய்கின்றன.
Knipschildt Chocolatier
இந்த சொக்லேட் பிரான்ஸ் நாட்டில் தயார் செய்யப்படுகிறது. உருண்டை வடிவில் க்ரீம் கலந்து தயார் செய்யப்படும் இந்த சொக்லேட்டின் விலை 250 டொலர் ஆகும்.
DeLafée
சுவிட்சர்லாந்து மக்களால் அதிகம் ருசிக்கப்படும் இந்த சொக்லேட், ஒரு பெட்டியில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த பெட்டிக்குள் 8 சொக்லேட்டுகள் மட்டுமே இருக்கும். உருண்டை வடிவில் இருக்கும் இந்த சொக்லேட்டில் 1910 முதல் 1920 ஆம் காலகட்டத்தில் தங்க நாணயங்களுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் விலை 330 டொலர் ஆகும்.
Amedei’s Prendimé
உலகில் முதன் முதலாக பெண் ஒருவரா தயார் செய்யப்பட்ட சொக்லேட். இது milk chocolate மற்றும் white chocolate என இரண்டு பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 55 டொலர் ஆகும். அமெரிக்காவில் இந்த சொக்லேட் பிரபலம்.
Debauve Chocolate
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் இந்த சொக்லேட் 200 ஆண்டுகளாக மக்களின் மனதை கவர்ந்துள்ளது. பார்ப்பதற்கு புத்தகம் போன்று இருக்கும் பெட்டியில் இந்த சொக்லேட்டுகள் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை 550 டொலர் ஆகும்.