இயக்குனர் சுராஜ் சில நாட்கள் முன்பு ஹீரோயின்களின் உடை பற்றி கூறி பெரிய சர்ச்சையில் சிக்கியது உங்களுக்கு தெரிந்திருக்கும். “கோடி ரூபாய் பணம் கொடுப்பதே.. ஆடை குறைவாக நடிப்பதற்காகத்தான்” என அவர் கூறியதுதான், அவருக்கு எதிராக திரையுலகமே வரிசைகட்டி வசைபாட காரணம்.
உங்கள் வீட்டு பெண்களை அப்படி பேசுவீர்களா? நடிகைகள் என்ன காசுக்காக ஆடையை கழட்டுபவர்கள் (stripper) என நினைத்தீர்களா? என நயன்தாரா கேட்டிருந்தார். அதை தொடர்ந்து இயக்குனர் சுராஜும் மன்னிப்பு கோரி செய்தி வெளியிட்டார்.
பிரச்சனை ஒருவழியாக அடங்கிவிட்ட நிலையில், தற்போது இணையவாசிகள் நயன்தாராவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
பில்லா படத்தில் பிகினி, ஏகன் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்திற்கு தேவையின்றி முதுகை காட்டும் வகையில் கவர்ச்சியாக ஒரு உடை அணிந்து நடித்த அவரா இப்படி சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.