Loading...
அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனைகளுள் கழுத்து வலியும் ஒன்றாகும்.
இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது
Loading...
அதனை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர் கதையாகிவிடும்.
இதனை ஆரம்பத்திலே சரி செய்ய சில கை மருந்துகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.
- நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.
- இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும்.
- ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.
- மஞ்சள் ஒரு டம்ளர் மாட்டுப் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், கழுத்து வலி போய்விடும்.
- 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் மிளகுத் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவுங்கள். இதை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தினால், கழுத்து வலி போய்விடும்.
- விரல் அளவுள்ள இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி, துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் துருவிய இஞ்சியை சேர்த்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சூடாக குடிக்க வேண்டும். இந்த இஞ்சி டீயை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, கழுத்து வலி போய்விடும்.
- சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். பின் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கழுத்து வலி காணாமல் போகும்.
Loading...