யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்தில் பயணிகளின் ஆசனங்களில் மரக்கறி உட்பட பல பொருட்களை ஏற்றுவதினால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்திலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கு ஆயிரத்திஇருநூறு ரூபாய் அறவிடப்படுகின்றது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்தினை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
எப்பொழுதும் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் பொருட்கள் ஏற்றப்படுகின்ற போதிலும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமையினால் பேரூந்தின் உள்பகுதிகள் , பயணிகள் ஆசனம் போன்றவற்றில் மரக்கறிகள் உட்பட பொருட்கள் ஏற்றப்படுகின்றதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்து என்பதினால் மரக்கறிகளின் துர்நாற்றம் வீசுவதுடன் பயணிகள் பேரூந்தில் ஏறி இறங்குவதற்கும் அசௌகரியமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் பயணிகள் பேரூந்தினை இரட்டை நோக்கு பேரூந்தாக மாற்றிய குறித்த பேரூந்து நடத்துனர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.