நாட்டில் நேற்றும் கொழும்பிலிருந்தே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று 401 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 201 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள்.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 82, களுத்துறை மாவட்டத்தில் இருந்து 32, காலி மாவட்டத்தில் இருந்து 9, கண்டி மாவட்டத்தில் இருந்து 4, குருநாகல் மாவட்டத்தில் இருந்து 3, நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 2 மற்றும் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுதவிர, 27 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 15 கொழும்பு விளக்கமறியல் கைதிகள், வெலிக்கட மற்றும் புதிய மகசீன் சிறைகளில் இருந்து தலா 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.