Loading...
மஹியங்கனை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 70.05 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சிபதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை இன்று பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு வேண்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
Loading...