தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குணகுமார் முன்னிலையில் இறந்தவரின் மனைவி ரமேஷ் அனிஷா சாட்சியமளிக்கையில்,
இறந்தவரான எனது கணவர் சிவபாலன் ரமேஷ_ம் (வயது 35) நானும் திருமணம் முடித்து பதினொரு வருடங்களாகின்றன.
எங்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். நாங்கள் மன்னார் எழுத்தூர் லூசியா வீதி பகுதியில் வசித்து வருகின்றோம்.
எனது கணவர் மேசன் வேலை செய்பவர். எனது கணவருக்கு குடி பழக்கம் உண்டு. இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தலைதூக்குவது வழமையாகும்.
சம்பவம் அன்று 24.12.2016 எனது கணவர் தலைமன்னாரிலுள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்று பிற்பகல் திரும்பிய பின் மதுபோதையில் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராரு பண்ணினார்.
நான் பணம் கொடுக்க மறுக்கவே அவர் தனக்கு தானே மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
பின் இவரை நாங்கள் காப்பாற்றி அன்றைய தினமே மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் 28.12.2016 மரணித்துள்ளார் என தெரிவித்தார்.