விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களுக்கு நிறைய தீங்கு செய்ததாகவும் அவரால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் அநுர பிரிய தர்ஷன யாபா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போரின்போது வடக்கு மற்றும் கிழக்கில் பல அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்கு இராணுவமே பொறுப்பு என்று ஸ்ரீதரன் குற்றம் சாட்டினார்.
அநுர பிரியதர்சன யாபா மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் மாவீரர்கள் என்று எவரும் இல்லை.ஆனால் பயங்கரவாதிகள் மட்டுமே இருந்தனர்.அந்தபயங்கரவாதிகளை தோற்கடிக்கவே இராணுவம் போரில் ஈடுபட்டது.
தனிநபர் ஒருவரின் செயற்பாட்டால் போரில் உயிரிழந்த அனைவருக்காகவும் அரசாங்கம் வருத்தம் தெரிவிக்கின்றது.
அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மற்றவர்களை அதற்குள் தள்ளும் சிலரின் முயற்சிகள் தொடர்பில் அரசாங்ம் சீற்றமடைந்துள்ளது.
யார் என்ன கூறினாலும் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவும் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவும் இராணுவம் மட்டுமே நடவடிக்கை எடுத்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.