பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஹவுஸ்மெட்ஸ்கள் மூன்று பேராக 5 குழுக்களாக பிரிந்து 3 மணி நேரத்தை கணிக்க வேண்டும்.
இதனை கடந்த மூன்று நாட்களாக விளையாடி வருகின்றனர் ஹவுஸ்மெட்ஸ். கடந்த வாரங்களாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பாலாஜியால் மதிப்பெண்கள் குறைந்து வருகிறது.
இதனால், இந்த வாரமாவது நன்றாக விளையாடி மொத்த பாயிண்ட்ஸையும் பெற வேண்டும் என முயற்சி செய்து போட்டியாளர்கள் முழு மூச்சாக தூக்கத்தை தொலைத்து விளையாடி வருகின்றனர்.
ஆனால் பாலாஜி அந்த சீரியஸ்னஸை புரிந்து கொள்ளமால் ஏனோதானோ என விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், முதல் நாள் டாஸ்க்கில் 3 மணி நேரத்தை நான்கறை மணி நேரத்துக்கும் மேலாக நின்று பாலாஜியும் அவரது அணியில் உள்ள ரம்யா பாண்டியன் மற்றும் சுச்சி ஆகியோர் கணித்தனர்.
இதையடுத்து, நேற்றைய டாஸ்க்கின் இரண்டாம் சுற்றில் மூன்று மணி நேரத்தை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் முடித்தார்.
நாம செட் பண்றதுதான் டைம் என தனது அணியினருடன் வியாக்கியானம் பேசிவிட்டு அவசர அவசரமாக முடித்தார்.
இதனை கிட்சனில் பாலாஜியிடம் விசாரித்தார் அர்ச்சனா. அப்போது, அரை மணி நேரத்தில் டாஸ்க்கை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நேற்று 4 மணி நேரத்தை கடந்ததை காம்பன்செட் பண்ண வேண்டும், இதிலேயே இன்னும் ஒரு மணிநேரம் மிச்சமாகி இருப்பதாக கூறினார். பாலாஜியின் இந்த நடவடிக்கையால் ரம்யா பாண்டியன் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்.
மேலும், பாலாஜி இப்படி பொறுப்பே இல்லாமல் விளையாடியதை பார்த்த நெட்டிசன்கள் இந்த முறையும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மண்ணை அள்ளி போடாமல் விடமாட்டார் போலிருக்கே என்று கூறி இன்றைக்கான வைரல் ட்ரோல் காட்சியியையும் வெளியிட்டுள்ளனர்.