Loading...
இலங்கையில் முதன்முறையாக அதிக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி ஒரு நபரின் சிறுநீரகத்திலிருந்த ஒரு பெரிய கல் அகற்றப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கலன பல்லியகுருகே மற்றும் சிறுநீரக வைத்தியர் உள்ளிட்ட வைத்திய குழுவினர் நேற்று (18) இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
Loading...
ஒரு நபரின் சிறுநீரகத்திலிருந்த 4 சென்ரிமீற்றர் அளவிலான கல்லை 140 வாட் உயர் ஆற்றல் கொண்ட லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கரைத்து அகற்றினர். சிறுநீர் பாதை முழுவதிலுமிருந்து கல் துகள்கள் அகற்றப்பட்டது.
Loading...