சர்வதேச ரீதியில் பதக்க வேட்டையை ஆரம்பித்தனர் யாழ் வசாவிளான் மகா வித்தியாலய மாணவிகள் (photos) சர்வதேசத்திலும் பதக்க வேட்டையை ஆரம்பித்தனர் வயாவிளான்மத்திய கல்லூரி மாணவிகள்.
தேசிய ரீதியில் இதுவரை காலமும் பளுதூக்கலில் சாதனைபடைத்துவந்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் சர்வதேச ரீதியிலும் தமது பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
தெற்காசியா நாடுகளுக்கு இடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டி இன்று (28.12.2016) மலேசியா கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.
இதில் 53 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய தேவராசா லயன்சிகா 90 கிலோ கிராம் எடையினைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் 70 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றி குகசீலன் றெஜினா 93 கிலோ கிராம் எடையினைத்தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும் வென்றனர்.
இவர்களுக்கான பயிற்றுவிப்பாளராக எஸ்_ஹரிகரனும் பொறுப்பாசிரியராக இப் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியரும் பழைய மாணவருமான கே.பகீரதன் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.