பிரித்தானியாவில் 10 வயது சிறுவன் ஒருவன் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Birmingham நகரின் Washwood Heath-ல் இருக்கும் ஆரம்ப பள்ளி ஒன்றில், கடந்த 12-ஆம் திகதி 10 வயது சிறுவன் ஒருவனுக்கு தலையில் அடிபட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
இந்நிலையில், அந்த சிறுவன் ஐந்து நாட்கள் சிகிச்சைக்கு பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இருந்த போது, சிறுவனின் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காயம் எப்படி வந்தது? என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இருப்பினும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உயிரிழந்த சிறுவனான Yasir Husssain அனைவராலும் விரும்பப்படும் மாணவன்.
அப்படிப்பட்ட மாணவன் உயிரிழந்ததால், நாங்கள் அனைவரும் மிகவும் சோகமாக இருக்கிறோம்.
யாசிர் அமைதியான மற்றும் நம்பிக்கையான பையன், வெற்றி பெறுவதில் உறுதியாகவும் இருந்தார். அவருக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
அவர் தனது நண்பர்களுடன் விளையாடுவதை விரும்பினார். எங்கள் எண்ணங்கள் அனைத்தும் யாசீரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன, இந்த கடினமான நேரத்தில் அவர்களும் எங்கள் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் மாணவர்களின் இழப்பைச் சமாளிக்க அவர்களுக்கு உதவ நாங்கள் எல்லா ஆதரவையும் வழங்குகிறோம்.
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் பள்ளியில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.